ஐஐடி மும்பை விடுதியில் மாணவர் சாஹில் வகோடே தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.ஐஐடி மும்பையில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவர் சாஹில் வகோடே (22), செப்டம்பர் 18 அன்று மாலை தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பருவத் தேர்வின்போது சாட்ஜிபிடி பயன்படுத்தி பரீட்சை எழுதியது ஆசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சில மணி நேரங்களிலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மாணவர் சாதி பாகுபாட்டிற்கு உள்ளானதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.மாணவரின் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஐஐடி பாம்பே நிர்வாகம் 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. சாதி பாகுபாடு மற்றும் தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.குற்றச்சாட்டின் பேரில் பேராசிரியரான சூர்யநாராயண டுல்லா, பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகுக்கும் விதமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில், தனது மகனின் மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படும் வரை மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட மாணவனின் தந்தை முடிவெடுத்துள்ளார்.இதுபற்றிப் பேசிய அவர், “நான் கைது செய்யப்பட்டாலும் கவலையில்லை. என் மகனுக்கு அரசியலமைப்பு ரீதியாக நீதி கிடைக்க வேண்டும். சத்ரபதி சிவாஜி, பூலே, ஷாஹூ மற்றும் அம்பேத்கர் போன்றோரின் மாநிலம் இது. நான் ஆசாத் மைதானத்தில் எனது போராட்டத்தைத் தொடங்கவுள்ளேன். நீதிக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.சாலை ஆய்வை விடியோ எடுத்த நபரை கன்னத்தில் அறைந்த பொதுப்பணித்துறை அமைச்சர்!The father of the IIT student has decided to stage a hunger strike until justice is served in the case of his son's suicide.