13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!

Wait 5 sec.

கால்பந்து உலகக் கோப்பையில் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு, இதுவரை 13 அணிகள் தேர்வாகியுள்ளன. முதல் அணியாக மெக்சிகோ தேர்வாக, தற்போது 13ஆவது அணியாக தென்னாப்பிரிக்கா தேர்வாகியுள்ளது. இந்த உலகக் கோப்பையில் 48 அணிகள் விளையாடுகின்றன. இதில் 12 குரூப்புகள் இருக்கின்றன. இதில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) முன்னேறுகின்றன. 16 அணிகள் தொடரிலிருந்து வெளியேறுகின்றன.ஒவ்வொரு பிரிவிலிருந்தும் (குரூப்) டாப் 2 அணிகள் முதலில் தேர்வாகும். அதன்படி 24 அணிகள் தேர்வாக, மீதமிருக்கும் 8 அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகளிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற அணிகள் தேர்வாகுமென ஃபிஃபா தெரிவித்துள்ளது.இதுவரை மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 13 அணிகள் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.குரூப் ஏ: மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா.குரூப் பி: ஸ்விட்சர்லாந்து, கனடா, போஸ்னியா.குரூப் சி: பிரேசில், மொராக்கோ. குரூப் டி: அமெரிக்கா. குரூப் இ: ஜெர்மனி குரூப் ஐ: பிரான்ஸ், நார்வே. குரூப் ஜே: ஆர்ஜென்டீனா.குரூப் கே: கொலம்பியா. 13 spaces filled for the Round of 32! #FIFAWorldCup #Qualified @mcdonalds pic.twitter.com/urLOWNuqTf— FIFA World Cup (@FIFAWorldCup) June 25, 2026குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி? FIFA world cup knock out stages Qualified teams list! 13 spaces filled for the Round of 32!