அசாமின் குவாஹாட்டியில் இருந்து துபை, அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் நடவடிக்கையாக, குவாஹாட்டியில் இருந்து அமீரகத்தின் துபை மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானங்களை இயக்குவதாக இன்று (ஜூன் 25) அறிவித்துள்ளது. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் குவாஹாட்டி - துபை இடையேயான விமான சேவையும், ஆகஸ்ட் 7 முதல் குவாஹாட்டி - அபுதாபி இடையேயான விமான சேவையும் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்துடன், குவாஹாட்டி - துபை விமானங்கள் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும், குவாஹாட்டி - அபுதாபி விமானங்கள் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், வடகிழக்கு இந்தியாவில் இருந்து மேற்காசியாவுக்கு முதல்முறையாக நேரடி விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.பாஸ்போர்ட் இந்திய குடியுரிமைக்கான ஆவணம் அல்ல! பயணத்துக்கு மட்டுமே!Air India Express has announced that it will operate direct flights from Guwahati to Dubai and Abu Dhabi.