வெனிசுவேலா நிலநடுக்கம்! 164 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! - இடைக்கால அதிபர் அறிவிப்பு!

Wait 5 sec.

வெனிசுவேலா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 164 பேர் பலியானதாக, அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். வெனிசுவேலாவில், வியாழக்கிழமை (ஜூன் 15) காலை அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான பிரேசிலின் அமேசான் காடுகள் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும்; இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள கட்டடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இத்துடன், நிலப்பரப்பில் இருந்து 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கராகஸ் நகரத்தின் லா குவைரா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியை வெனிசுவேலா அரசு பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், வெனிசுவேலாவில் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவித்த அதிபர் ரோட்ரிக்ஸ், இந்தப் பேரிடரில் சிக்கி குறைந்தது 164 பேர் பலியானதாகவும், 971 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கட்டட இடிபாடுகளிலும் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.வெனிசுவேலாவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! கட்டடங்கள் சேதம்!Venezuela's acting president, Delcy Rodríguez, has announced that at least 164 people were killed in a powerful earthquake that struck the country.