பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி - நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசனுக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்றது.இன்று காலை நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.குஷ்பு மகளும், மணப்பெண்ணுமான அவந்திகா, அட்டாக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர். சுந்தர் சி - குஷ்பு தம்பதி, திருமண அழைப்பிதழை, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய், முக்கிய நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுக்கு நேரில் சென்று கொடுத்திருந்தார்கள்.