நடிகர் மம்மூட்டி ஓம் படப்பிடிப்பில் கேக் வெட்டி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். மலையாள சினிமா மட்டுமல்லாது இந்தியளவில் மிகச்சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த மம்மூட்டியின் கலை பங்களிப்புக்காக மத்திய அரசின் பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக்கொண்டார். மம்மூட்டிக்கு இந்த விருது கிடைத்தது திரைத்துறையினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ். இந்த நிலையில், மம்மூட்டி நடித்துவரும் தனுஷின் ஓம் படப்பிடிப்பில் அவருக்கு பெரிய கேக் கொண்டுவரப்பட்டதும் இதனை நடிகர் மம்மூட்டி வெட்ட, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. . பவன் கல்யாண் நடிக்கும் ஓஜி - 2 அறிவிப்பு! Actor Mammootty shared his joy by cutting a cake on the set of the film 'Om'.