போதைப்பொருள் பயன்படுத்தினேனா? அமைச்சர் சரத்குமார் விளக்கம்!

Wait 5 sec.

ஐபிஎல் போட்டியின்போது குழந்தைக்கு மாத்திரையை நொறுக்கி வழங்கியதை, போதைப்பொருள் பயன்படுத்தியதாக தவறாக செய்தி பரப்புகின்றனர் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் விடியோ வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். தற்போது தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ள சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சர் கில்லி சரத் போதை மருந்து பயன் படுத்துறாரா..??சேப்பாக்கம் மைதானத்தில இத்தனை பேர் முன்னாடி வீடியோ போடுற அளவுக்கு தைரியம்...pic.twitter.com/idsNSP8LMV— Mr. வெட்டி (@iam_Vetti) June 26, 2026இதுபற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துடன் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் இதுபற்றி விளக்கமளித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "போதைப்பொருள் எதிர்ப்பு நாளில் இன்று காலை ஒரு விழிப்புணர்வு நிகழ்வுக்குச் சென்று வந்தேன். அங்கு சென்று வந்தபிறகு ஒரு வதந்தி பரவி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம், நண்பர்களுடன் ஐபிஎல் போட்டிக்குச் சென்றிருந்தோம். குழந்தைக்கு உடம்பு சரியில்லை காரணத்தால் மாத்திரை விழுங்க மறுத்ததால் அதனை பொடியாக்கி நீரில் கலந்து கொடுத்தோம். அந்த விடியோவை போதைப்பொருள் என்று சொல்லி தவறான விடியோவை இப்போது பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் சுற்றி அனைவரும் இருக்கும்போது எப்படி முடியும்? தவறான விடியோவை பரப்பாதீர்கள்" என்று கூறினார். அவரது மனைவியும் இதுபற்றி விளக்கமளித்துள்ளார். முன்னதாக,சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தொடக்கிவைத்து அதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. Minister Sarathkumar clarifies video that showing alleged drug use in chepauk stadium chennaiதவெகவில் சி. விஜயபாஸ்கர் இணைவது தள்ளிப்போகிறதா? காரணம் என்ன?இந்தியாவில் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் மட்டும்தானா?