இயக்குநர் கே. பாக்யராஜ், தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்ததால், அவரது கண்களை தானம் பெறுவதற்காக மருத்துவர்கள் குழு இல்லத்துக்கு வருகை தந்துள்ளது.இயக்குநர், திரைக்கதை மன்னன் பாக்யராஜ், மாரடைப்பால் இன்று காலை திடீரென காலமானார். அவருடைய நுங்கம்பாக்கம் இல்லத்தில் அவரது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, தன்னுடைய கண்களை தானம் செய்ய பதிவு செய்து வைத்திருந்ததால், கண் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கே. பாக்யராஜ் மறைவுகுறித்து தகவல் அளித்தனர்.உடனடியாக கண் மருத்துவமனை மருத்துவர்கள் குழு பாக்யராஜ் வீட்டுக்கு விரைந்துள்ளனர். பாக்யராஜின் கருவிழிகளை பெற்று, கண் பார்வையற்றவர்களுக்கு பொருத்துவார்கள். அதன் மூலம் மறைந்தாலும் பாக்யராஜ் இந்த உலகை தன்னுடைய கண்களால் காண்பார் என்பது அவரது குடும்பத்தாருக்கும் ரசிகர்களுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. Bhagyaraj, who pledged his eyes for donation! Even after passing away, he continues to see the world!