மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று காலை நடைப்பயிற்சி சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.அவரது உடல், நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு நேரில் வந்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டதோடு, ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்! தமிழ் சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ் என்று இரங்கல் தெரிவித்துள்ளார். ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம்!இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய… pic.twitter.com/UgpbuWDwC5— M.K.Stalin (@mkstalin) June 27, 2026 DMK leader M.K. Stalin pays personal homage to the mortal remains of K. Bhagyaraj!