மறைந்த இயக்குநர், நடிகர் கே. பாக்யராஜ் உடலுக்கு நாளை மதியம் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெரிய உடல்நலப் பிரச்னைகள் ஏதுமின்றி, வழக்கம் போல இன்று காலை நடைப்பயிற்சி சென்ற கே. பாக்யராஜ், திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியிருக்கிறார்.உடனடியாக அவரை குடும்பத்தினர் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நாளை பகல் 1.30 மணியளவில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் பாக்யராஜ் இறுதிச் சடங்குகள் நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.திரைக்கதை மன்னன் என்று தமிழ்த் திரையுலகினரால் கொண்டாடப்பட்டவர் இயக்குநர் கே. பாக்யராஜ். மிக அழகிய திரைக்கதைகளால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர். முந்தானை முடிச்சி, தாவணிக் கனவுகள் போன்ற படங்களின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செம்மையாக செதுக்கியிருப்பார்.மக்களின் மனங்களில் நீங்காத பல நல்ல திரைப்படங்களைக் கொடுத்த பாக்யராஜுக்கு என்றுமே மறைவில்லை. When will K Bhagyaraj funeral Family shares details