ஸ்பெயினிடம் தோல்வி: கண்ணீருடன் வெளியேறியது 2 முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே!

Wait 5 sec.

லீக் சுற்றில் ஸ்பெயினிடம் தோல்வியுற்றதால், கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து உருகுவே அணி வெளியேறியது. இந்த அணி 2 முறை உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு உலகக் கோப்பையில் லீக் சுற்றுகள் முடிவடையும் தருணத்தில் இருக்கின்றன. இந்த நிலையில், மெக்சிகோவில் குவாடலஜாரா அரங்கத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடந்த போட்டியில் ஸ்பெயின் - உருகுவே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணியின் அலெக்ஸ் பேனா 42ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் திணறின. 90+4ஆவது நிமிஷத்தில் உருகுவேயின் அகுஸ்டின் கானோபியோவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. குரூப் ஹெச் பிரிவில் பங்கேற்றிருந்த உருகுவே அணி முதலிரண்டு போட்டிகளில் டிரா செய்திருந்தது. இந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் தோல்வியுற்று உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. உருகுவே வீரர்கள் கண்ணீருடன் சென்றது அந்நாட்டு மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணி 1930, 1950 ஆகிய இரண்டு முறை உலகக் கோப்பைகளை வென்றிருந்தது. இதுவரை வெளியேறிய அணிகளிலேயே அதிக தரவரிசை (19) கொண்ட அணிகளில் உருகுவே முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக லீக் சுற்றுடன் வெளியேறுகிறது. மிகச் சிறிய நாடான கேப் வெர்டே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை! Spain wins World Cup group, beating Uruguay 1-0 as Muslera's error sends 2-time champion home