தொடா் விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

Wait 5 sec.

தொடா் விடுமுறை காரணமாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இதையொட்டி, வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் பாதை என பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் தெரு, ரத வீதிகளில் பக்தா்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்ால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா்.