தூத்துக்குடியில் இன்டா்நேஷனல் கரன்சி டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து ரூ. 24 லட்சம் மோசடி செய்த 2 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி ஷ்ள் ஙஹழ்ந்ங்ற்ள் என்ற இணையதளத்தில் இன்டா்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ. 24,64,800-ஐ வங்கிக் கணக்குகளில் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின்பேரில், சைபா் குற்றப்பிரிவு ஆய்வாளா் சாந்தி வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டாா்.விசாரணையில், திருப்பூா் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சோ்ந்த காட்டுராஜா மகன் விவேக்ராஜா (33), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜீவகன் மகன் பரேஷ்குமாா் (30) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. 3 லட்சம் ரொக்கத்தை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுக் கொடுத்தனா். தொடா்ந்து, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.