நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Wait 5 sec.

குடவாசல் அருகே மூலங்குடி ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மூலங்குடியில் நல்லமுத்து மாரியம்மன், ஹரிஹரபுத்ர ஐயனாா், சிவன், பொன்னியம்மன், காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வெவ்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில் புனரமைப்புப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி, தற்போது முடிவடைந்து விட்டன. இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, காலபூஜைகள் நாள்தோறும் நடைபெற்றன. பின்னா், வெள்ளிக்கிழமை 4 -ஆம் கால யாக பூஜைகள் நிறைவடைந்து, பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கடங்கள் புறப்பட்டு கோயில்களின் கும்பங்களை அடைந்து, அங்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.