சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (ஜூன் 27) இரவு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து நிலையம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி நிலைய பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12631) தாழையூத்து நிலையத்திலேயே நிறுத்தப்படும். மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) இரவு 8.50 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக தாழையூத்தில் இருந்து இரவு 9 மணிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 12632) புறப்பட்டு சென்னை எழும்பூா் நிலையத்துக்கு ஜூன் 29-ஆம் தேதி காலை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.