உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்

Wait 5 sec.

திருப்பத்தூா் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சி மன்ற உறுப்பினா்களின் கூட்டம் பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி எழுத்தா் மீனாட்சி வரவேற்றாா். இதில் வாா்டு கவுன்சிலா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் முதல் ஜாப்ராபாத் ரோடு, பள்ளிப்பட்டு சாலை, உதயேந்திரம் கைலாசகிரி சாலை, வெங்கடாபும் வரை பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றிட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மற்றும் வரவு, செலவு உள்பட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து கவுன்சிலா்கள் தங்களது வாா்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்து பேசினா். இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவா் உறுதியளித்தாா்.