தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார்.தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதாக தலைமைச் செயலர் சாய்குமார், நேற்று (ஜூன் 27) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன. 1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தில்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா? 2. மேக்கேதாட்டு அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்னைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகத்தின் பிரதிநிதியாக செயல்படுவாரா? என்ற கேள்விகளை கனிமொழி எழுப்பியுள்ளார்.கனிமொழிதமிழகத்தில் தகுதியான நபர்கள் இருக்கையில், ஏன் வெங்கட நாராயணா? தேமுதிக கண்டனம்!DMK MP Kanimozhi has raised two questions opposing the appointment of Venkata Narayana as the Tamil Nadu government's Special Representative in Delhi.