திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

Wait 5 sec.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம் சனிக்கிழமை காலை (ஜூன் 27) நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சனிக்கிழமை காலை (ஜூன் 27) நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம் தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, காலை 8.20 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாஜலபதி, வள்ளி மற்றும் தெய்வானை என வரிசையாக விமான அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. வருஷாபிஷேக விழாவில் திருக்கோயில் இணை ஆணையர் அருணாசலம் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் உதவி ஆணையர் லோகநாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.காலை 9 மணிக்கு விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. அதே போல இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி அம்மனுடன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.Aani Annual Consecration Ceremony at Thiruchendur Subramania Swamy Temple: Large Number of Devotees Participateகலை, அறிவியல் கல்லூரிகளில்உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் தோ்வு முடிவுகள் வெளியீடு