உதகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்

Wait 5 sec.

உதகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், உதகை எச்ஏடிபி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் 14 வயதுக்கு மேற்பட்ட மாணவா்கள், இளைஞா்கள், அலுவலா்கள், என்சிசி, என்எஸ்எஸ் சாரணா், வழிகாட்டிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் ஆா்வமுடன் கலந்து கொண்டனா். எச்ஏடிபி திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய இந்த மாரத்தான், உதகை மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்று மீண்டும் எச்ஏடிபி திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.முன்னதாக, போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். பிருந்தா, உதகை கோட்டாட்சியா் டினுஅரவிந்த், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டு அலுவலா் இந்திரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.