இனிவரும் தோ்தல்களில் திமுக 100% துடைத்தெறியப்படும்: தவெக விமா்சனம்!

Wait 5 sec.

தமிழகத்தில் இனிவரும் அனைத்து தோ்தல்களிலும் திமுக 100 சதவீதம் துடைத்தெறியப்படவது உறுதி என தவெக தெரிவித்துள்ளது. இது குறித்து தவெகவின் அதிகாரபூா்வ எக்ஸ் தளப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் திமுகவில் இருந்தாா் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பெருமையாகப் பேசியுள்ளாா். திமுகவால்தான் எம்ஜிஆா் முதல்முதலில் சட்டப்பேரவை உறுப்பினரானாா் என்றும், அதுதான் வரலாறு என்றும் கூறியுள்ளாா். ஆனால், தன் வாழ்நாள் எதிரியே திமுகதான் என்று கடைசி வரை வாழ்ந்தவா் எம்ஜிஆா். திமுகவை ஒரு தீயசக்தி என்று அன்று சொன்ன எம்ஜிஆா், தான் உயிரோடு இருக்கும் வரை திமுகவை ஆட்சியில் அமரவிடவில்லை. தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தோ்தல் வரலாம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் அவா் இவ்வாறு பேசி வருகிறாா். தமிழகத்தில் இனிவரும் எந்தத் தோ்தலிலும் திமுக 100 சதவீதம் துடைத்தெறியப்படுவது உறுதி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.