125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அன்புமணி ராமதாஸ்

Wait 5 sec.

மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதித் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 100 நாள்கள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி, ஜூலை 1-ஆம் தேதி முதல் 100 நாள்களுக்குப் பதிலாக 125 நாள்கள் வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு சில நாள்களே உள்ள நிலையில், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. ஆனால், தமிழக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பான நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளதால், தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் வாய்ப்புள்ளது. இத்திட்டம் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. எனவே, 125 நாள்கள் வேலை உறுதித் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்து அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுமா? என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.