நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கார்கி திரைப்படம் குறித்து பேசியுள்ளார். தமிழில் ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “கார்கி திரைப்படம் முதலில் எனக்குதான் வந்தது. ஆனால், இதில், பெரிய நடிகை யாராவது நடித்தால்தான் சரியாக இருக்குமென சாய் பல்லவியை அணுகச் சொன்னேன். இப்போது, கார்கி கதை என்னிடம் வந்தால், நான் அதில் நடிப்பேன். கதையின் முக்கியத்துவம் கருதி அதனைத் தயாரிக்கவும் செய்வேன்.” எனத் தெரிவித்துள்ளார். கார்கி திரைப்படம் பல விருதுகளை வென்றதுடன் நல்ல விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சூர்யா - 47 படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை: ஜித்து மாதவன்Actress Aishwarya Lekshmi has spoken about the movie Gargi