நடிகர் சூர்யாவின் 47-வது படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியுள்ளார். கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், சூர்யா - 47 ஆகிய படங்களில் ஒப்பந்தமானார். இதில், வெங்கட் அட்லுரி இயக்கிய விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிப்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், ”இப்படத்தை எப்படி ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதனால்தான் முதல் போஸ்டர் கூட வெளியிடப்படவில்லை. மேலும், பெயரும் இன்னும் முடிவாகவில்லை” என படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் தெரிவித்துள்ளார். அரசன் முக்கியமான படப்பிடிப்பு நிறைவு!