டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷோபனா மொஸ்டாரி 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள், ஷர்மின் அக்தர் 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாரிஸேன் காப், ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.Batting first in the T20 World Cup match against South Africa, Bangladesh scored 117 runs for the loss of 5 wickets.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாட வேண்டும்: ஸ்மிருதி மந்தனா