அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்க வேண்டும்! திமுக மாணவரணி நாளை (ஜூன் 29) ஆர்ப்பாட்டம்!

Wait 5 sec.

தவெக அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி திமுக மாணவரணி நாளை (ஜூன் 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் விடியோ வெளியிட்ட சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. குழந்தைக்கு மாத்திரை கொடுக்க செல்போனில் வைத்து மாத்திரையை பொடியாக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்திருந்த நிலையில், அவரை பதவி நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தை திமுக மாணவரணி அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் விடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாளை (ஜூன் 29) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற விடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா? இல்லையா? என்று பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது போல் விடியோ எடுத்து, அதனை தக் லைஃப் மொமண்ட் என்று ரீல்ஸ் ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அமைச்சரின் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்Minister Sarathkumar must be dismissed! DMK Student Wing to stage a protest tomorrow