பாக்யராஜ் மறைந்த நாளில் இந்தக் கொண்டாட்டம் தேவையா? கேள்விகளுக்கு குஷ்பு பதிலடி!

Wait 5 sec.

இயக்குநர் பாக்யராஜ் மறைந்த நாளில் குஷ்பு பகிர்ந்த புகைப்படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன.இயக்குநர், நடிகர் என இந்தியளவில் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன் 27) திடீரென உயிரிழந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தையும் வேதனையையும் அளித்துள்ளது.தொடர்ந்து, பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்து நூற்றுக்கணக்கான திரைப் பிரபலங்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு வந்தனர். முக்கியமாக, தமிழக முதல்வர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இறப்பதற்கு முந்தைய நாள் நடிகை குஷ்புவின் மூத்த மகள் திருமணத்திற்காக கோவா சென்று திரும்பினார். அடுத்த நாள் பாக்யராஜ் மறைந்ததும், குஷ்பு குடும்பத்தினரால் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. மேலும், தன் மகளுக்குத் திருமணம் நடைபெற்ற மகிழ்ச்சியில் இருந்த குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களைப் பகிர்ந்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், இந்தக் கொண்டாட்டம் இப்போது தேவையா? ஒருநாள் கழித்து வெளியிடக்கூடாதா? என குஷ்புவைக் கடுமையாக விமர்சித்தனர். அப்பதிவிலேயே சிலருக்கு குஷ்பு பதிலும் அளித்தார். குறிப்பாக, “என்னைவிட பூர்ணிமாவை அறிந்தவரா நீங்கள்? விருப்பமில்லை என்றால் என்னைப் பின்தொடராதீர்கள்” எனக் கூறியுள்ளார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.விடை பெற்றார், அன்புடன் பாக்யராஜ்! The photos shared by Khushbu on the day of Director Bhagyaraj's passing have drawn negative criticism.