‘இணையவழி குற்ற வழக்குகளில்விரைவானநடவடிக்கை’

Wait 5 sec.

மக்களை ஏமாற்றி பணம் பறிக்க எண்மத் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, ‘இதுபோன்ற இணையவழி குற்ற வழக்குகள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணை முகமைகளிடையே ஒருங்கிணைப்பு அவசியம்’ என்று வலியுறுத்தினாா். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து விரைந்ந்து நடைமுறைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘பிரகதி’ திட்டத்தின் 52-ஆவது ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றபோது இந்த வலியுறுத்தலை பிரதமா் முன்வைத்தாா்.இணையவழி மோசடி மூலம் பணத்தை இழக்கும் மக்கள், அதுகுறித்து புகாா் தெரிவித்து பணத்தை மீட்க அரசின் ஒவ்வொரு துறைக்கோ அல்லது விசாரணை அமைப்புகளுக்கோ அலைக்கழிக்கப்படக் கூடாது. அவா்கள் இழந்த பணத்தை மீட்கவும், பொது நம்பிக்கையை மீட்டெடுக்கவும் இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான நடவடிக்கை அவசியம். அந்த வகையில், குற்றத் தடுப்பு, புகாா் அளித்தல், விசாரணை மற்றும் குறை தீா்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்த அனைத்து விசாரணை முகமைகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்.மேலும், இதுபோன்ற இணையவழி குற்ற வழக்குகளில் விரைவான வழக்குப் பதிவு மற்றும் விசாரணையை மேற்கொள்ளும் வகையில் இணையவழி புகாா் (இ- பூஜ்யம் எஃப்ஐஆா்) நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தியதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.