குடியாத்தம் ஒன்றியம், முக்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளஸ்ரீபாலால அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்ததையடுத்து கடந்த 2ஆண்டுகளாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை அதிகாலை கோ-பூஜை, 4 ஆம் கால யாகபூஜைகள், தத்வாா்ச்சனை, மகாபூா்ணாஹூதி, கலச புறப்பாடு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்புஅபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முக்குன்றம் ஊராட்சித் தலைவா் ஆா்.கங்காராம், துணைத் தலைவா் ஜி.கே.ஏகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி.சுரேஷ்குமாா், ஊராட்சி உறுப்பினா் எம்.யு.கலாவதி உமாபதி ஆகியோா்1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினா். ஏற்பாடுகளை தா்மகா்த்தா ஏ.பி.கஜேந்திரன், செயலா் வி.புருஷோத்தமன்,பொருளாளா் வி.மூா்த்தி, எம்.சி.கிருஷ்ணமூா்த்தி, ஜி.சின்னப்பன் மற்றும் கிராம மக்கள்,இளைஞா்கள் செய்திருந்தனா்.