மாதம் ரூ1,66,050 சம்பளத்தில் தில்லி ஐஐடி-ல் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

Wait 5 sec.

தில்லியில் உள்ள இந்தியன் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐஐடி) காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விபரம்ல வருமாறு:வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: IITD / IRD / 142/2026பணி: Program Co-ordinatorகாலியிடங்கள் : 2சம்பளம்: மாதம் ரூ1,66,050தகுதி : பணிக்கேற்ற பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் பத்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Project Managerகாலியிடங்கள்: 2சம்பளம்: மாதம் ரூ.64,260தகுதி : நிதியியல் பிரிவில் முதல் வகுப்பில் எம்பி தேர்ச்சி யுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Project Assistantகாலியிடம்: 1சம்பளம்: மாதம் ரூ.47,790தகுதி : வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஐடி பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு (ஆன்லைன்) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை: https://ird.iitd.ac.in/rec இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிற்க்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து ird recruitmentcell@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.6.2026