தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மத்திய மாவட்ட தவெக சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜூன் 22 -இல் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன் ஏற்பாட்டில் கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான என்.ஆனந்த் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், தேவையான உபகரணங்கள், தாய்க்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா். இதில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ், போளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அபிஷேக், செங்கல்பட்டு நகர செயலாளா் ஜின் காா்த்திக் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.