நீட் வினாத்தாள் கசிவு! குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் காவல் நீட்டிப்பு!

Wait 5 sec.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரின் காவலை ஜூலை 11 வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு தொடர்பான கூடுதல் விசாரணைக்காகக் காவலை நீட்டிக்கக் கோரி, சிறப்பு அரசு வழக்குரைஞர் வி.கே. பதக் மூலம் சிபிஐ தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிபதி விஜேதா சிங் ராவத் விசாரித்து இவ்வழக்கில் கூடுதல் விசாரணைக்காகக் காவலை நீட்டிக்கக் கோரி, சிறப்பு அரசு வழக்குரைஞர் வி.கே. பதக் மூலம் மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஜேதா சிங் ராவத், அம்மனுவை ஏற்றுக்கொண்டார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேரில் 10 பேரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் யஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், தனஞ்சய் லோகண்டே, தேஜஸ் ஹர்ஷத் ஷா, சுபம் கைர்னார், மனிஷா வாக்மாரே, மனிஷா ஹவல்தார் மற்றும் டாக்டர் மனோஜ் ஷிரூரே ஆகியோரின் நீதிமன்றக் காவலை நீதிமன்றம் நீட்டித்தது.மீதமுள்ள மூவரில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பி.வி. குல்கர்னி மற்றும் சிவராஜ் ரகுநாத் மோட்டேகான்கர் ஆகியோர் ஏற்கெனவே ஜூலை 8 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான மனிஷா குருநாத் மந்தாரே, ஜூன் 30 வரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட தேசிய தகுதி நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை மே 12-ஆம் தேதி ரத்து செய்தது.இதையடுத்து, ஜூன் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட மறுதேர்வில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் மருத்துவ இளநிலை படிப்புக்கான மறுதேர்வை எழுதினர். A Delhi court on Monday extended the judicial custody of 10 accused arrested in connection with the NEET-UG 2026 examination leak till July 11.தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!