டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய மகளிரணி அதன் வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாழ்வா சாவா போட்டியில் நேற்று (ஜூன் 28) விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியது.இந்த நிலையில், டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய மகளிரணி அதன் வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 வடிவிலான போட்டிகளில் நாங்கள் உண்மையில் எங்களது வியூகத்தில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கிறது. நாங்கள் எந்த மாதிரியான காம்பினேஷனுடன் களமிறங்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் எங்களிடம் முன்னேற்றம் தேவைப்படுவதைக் கண்டறிய முடிந்தது. பேட்டிங்கிலும் நாங்கள் அதிரடியாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 அல்லது 20 ரன்கள் அதிகமாக எடுத்திருக்கலாம் என்றார்.Head coach Amol Muzumdar has stated that the Indian women's team needs to change its strategy in T20 matches.அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காதது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்!