ஐந்து பைசா செலவு செய்யாமல் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்று மதிமுக முதன்மைச்செயலரும் திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ திங்கள்கிழமை (ஜூன் 29) பேசியுள்ளார்.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக அதிக இடங்கள் கொடுத்ததாக மதிமுக தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், கூட்டணியிலிருந்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 27) வெளியேறியது.இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் மதிமுக முதன்மைச்செயலர் துரை வைகோ இன்று பேசியதாவது:நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்கிறோம். நீங்கள் மதிமுகவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என்று பார்க்காதீர்கள், சாதி மதத்தைப் பார்க்காதீர்கள், கட்சியைப் பார்க்காதீர்கள். ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், சட்டப்பேரவை உறுப்பினர் என எந்தப் பதவியாக இருந்தாலும் நல்லவர்கள் யாரென்று பார்த்து தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் தமிழகத்தில் நல்லதொரு மாற்றம் நிகழும். நல்லதொரு மாற்றம் என்று சொல்வதால் தவெகவையோ, விஜய்யையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். ஐந்து பைசா செலவு செய்யாமல் ஒரு கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளாக பணமிருந்தால்தான் ஊராட்சி மன்றத் தலைவராக முடியும். குறைந்தபட்சம் 5 முதல் 10 கோடிகள் இருந்தால்தான் சட்டப்பேரவை உறுப்பினராக முடியும். 40 கோடிகள் இருந்தால்தான் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்ற நிலை இருந்தது. இதையெல்லாம் தவிர்த்து, மக்கள் பணி நன்றாக செய்தாலே அவர்களின் ஆதரவு பெறமுடியும் என்ற மாற்றத்தை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மாற்றம் தொடர வேண்டும்.இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேட்டிMDMK Principal Secretary and Trichy MP Durai Vaiko stated on Monday (June 29) that TVK has come to power without spending even five paise.