நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி (34 வயது) ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல்முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் டெஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மாட் ஹென்றி 11 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார். இந்த அபாரமான பந்துவீச்சினால் அவர் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் வரலாற்றிலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வீரர் பந்துவீச்சில் முதலிடம் பிடித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக நியூசிலாந்தின் ஜாக் கோவி (1947), ரிச்சார்ட் ஹாட்லீ (1984-1990) ஐசிசி டெஸ்ட்டில் முதலிடம் பிடித்துள்ளார்கள். தற்போது, 36 ஆண்டுகளுக்குப் பிறகு மாட் ஹென்றி இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை 1. மாட் ஹென்றி - 870 புள்ளிகள் 1=. ஜஸ்ப்ரீத் பும்ரா - 870 புள்ளிகள் 3. மிட்செல் ஸ்டார்க் - 838 புள்ளிகள்4. பாட் கம்மின்ஸ் - 832 புள்ளிகள் 5. மார்கோ யான்சென் - 825 புள்ளிகள் ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்! Thirty-six year rankings drought over for Newzealand, Matt henry with Bumrah two new No.1s crowned