முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! - பெ. சண்முகம் கண்டனம்!

Wait 5 sec.

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் பேசியதற்கும், அதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பதிவுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு செயலர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததைக் கேலி செய்யும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியிருந்தார். மேலும், அதற்கு முதல்வர் விஜய்யின் தனி வாழ்க்கையைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி, இன்று (ஜூன் 24) அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, “அப்பாவைக் காணோம்” என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது. இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் “கணவனைத் தேடும் மனைவி” என்று பேசியதும் தவறுதான். “ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்P. Shanmugam, State Secretary of the CPIM, has condemned the remarks made by CM Vijay in the Assembly and the subsequent statement issued by LOP Udhayanidhi in response.