படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு.இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது.பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டனர்.இந்த திரைப்படம் புராணம், மர்மம் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் நாகபந்தம்.திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சாமி கோயில், பொக்கிஷம், மர்மம், நாக பந்தம், பிரம்ம கமலம், சிவன் ஆகிய பின்னணியில் இந்த கதை உருவாகிறது.வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரைப்படம்.