இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள்

Wait 5 sec.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், இளம் தொழிலதிபர் கொலையில் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாகவும், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கொலை செய்யப்பட்ட கேத்தனும் அவருடைய வருங்கால மனைவியும் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே, கொலையாளி சேத்தன் வந்து, அவர்களுக்காக காத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புணேவைச் சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வால், அவரது வருங்கால மனைவி மற்றும் ஆண் நண்பரால் மலையிலிருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் கொலையாளிகள் இருவருமே பயங்கர கிரிமினலாக பல விஷயங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேத்தன், தன்னுடைய செல்போன் மூலம் தன்னை அடையாளம் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய செல்போனை தன்னுடைய கடையிலேயே வைத்துவிட்டு, தன்னுடய கடை ஊழியரின் செல்போனை எடுத்து வந்துள்ளார்.அந்த ஊழியரின் செல்போனும் தற்போது விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளது. Young Entrepreneur Murder! Investigation Reaches a Crucial Stage! Several Shocking Details Revealed.