நடிகை ராதிகா மறைந்த இயக்குநர் பாக்யராஜின் அஞ்சலி நிகழ்வு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது என வேதனையடைந்துள்ளார். இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்குப் பின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலையும் அங்கு வரும் பிரபலங்களையும் பதிவு செய்ய நூற்றுக்கணக்கான ஊடகத்தினர் குவிந்தனர். தமிழின் முன்னணி செய்தி நிறுவனங்களைத் தவிர்த்து, ஏகப்பட்ட யூடியூப் சேன்ல்கள் காணொலிகளை எடுக்க நெரிசலை ஏற்படுத்தியதுடன் திரும்பிய பக்கமெல்லாம் கேமராக்களை வைத்தது சர்ச்சையானது.இந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “50 ஆண்டுகால சிறப்பான நட்புக்கு, மகத்தான படைப்பாளிக்கு, சினிமாவின் எல்லைகளை வரைந்தவருக்கு, பல சிரிப்புகளைப் பகிர்ந்தவருக்கு, எப்போதும் என் குடும்பத்துடன் விஸ்வாசமான வழியில் நின்றவருக்கு இறுதியாக ஒரு குட்பை! அமைதியாக செலுத்த வேண்டிய அஞ்சலி இடம் சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. எப்போது, எங்கே நாம் இந்த அளவுக்கு இரக்கமற்றவர்களாக மாறினோம்?Final goodbye,to 50 years of a very special friendship ,a great creator,a evolved writer,a person who drew wonderful boundaries in Cinema,a man I shared many laughs,wonderful work, who stood by my family always in his quiet loyal way. A shocking goodbye, for his family, friends,… pic.twitter.com/8GeRJ5sipP— Radikaa Sarathkumar (@realradikaa) June 29, 2026 மறைந்தவரின் ஆன்மாவுக்கு உரிய கண்ணியமும் மரியாதையும் கிடைப்பதை உறுதி செய்ய, அரசு மற்றும் திரைத்துறை இணைந்து தெளிவான நடைமுறைகளையும், ஒருங்கிணைந்த நிர்வாகத் திட்டங்களையும் வகுக்க வேண்டிய நேரம் இது." என வேதனையுடன் கூறியுள்ளார். பாக்யராஜ் மறைந்த நாளில் இந்தக் கொண்டாட்டம் தேவையா? கேள்விகளுக்கு குஷ்பு பதிலடி!Actress Radhika has expressed her anguish, stating that the tribute event for the late director Bhagyaraj turned into a circus.