ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் சி.ஐ.எஸ்.எஃப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 9 வீரர்கள் காயமடைந்தனர்.ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள கத்ரா அருகே திங்கள்கிழமை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 9 வீரர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதில், 3 பேர் படுகாயமடைந்தனர். சி.ஐ.எஸ்.எஃப் பணிக்காக தாராக்கோட்-பாலினி வழித்தடத்தில் ஒரு வளைவுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகனம் திடீரென தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநரும் காயமடைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 3 வீரர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். லேசான காயமடைந்த மற்ற ஏழு பேர் கத்ரா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜம்மு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களில், தலையில் பலத்த காயமடைந்த காவலர் ஷௌமி, தலைமைக் காவலர்கள் பி.கே. தித்ரியா மற்றும் எம்.எம். டே ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.துணை போலீஸ் ஐடிஜி ஷிவ் குமார் சர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று, காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். Nine Central Industrial Security Force (CISF) personnel were injured, three of them critically, when their vehicle overturned near Katra in Jammu and Kashmir's Reasi district on Monday, officials said. என்எல்சி பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், அதன் நிர்வாகத்திற்கும் கண்டனம்! இபிஎஸ்