நடிகர் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நடிகர் நிவின் பாலி கூட்டணியில் உருவான பிரேமம் திரைப்படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து பல கோடிகளை வசூலித்தது. இப்படத்தின் வெற்றியே நிவின் பாலிக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்தது. இதில், நடித்த சாய் பல்லவியும் நாயகியானார். தொடர்ந்து, இக்கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, நடிகர் நிவின் பாலியின் 50-வது திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு விஜயம் எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இதில், நிவின் பாலி இருசக்கர ரேஸர் தோற்றத்தில் இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. The title of the new film starring actor Nivin Pauly has been announced.