சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது முதல், இன்று வரை அது பேசுபொருளாகவே இருக்கிறது. மிக மோசமான குளறுபடிகள் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் வைரலான விடைத்தாளை மறுமதிப்பீடு செய்தும், ஒரு மதிப்பெண்ணும் கிடைக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.சிபிஎஸ்இ இயற்பியல் விடைத்தாளில் பல்வேறு விடைகள் திருத்தப்படாமல் இருந்தது புகைப்படங்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருந்தது. முதலில், வேறு மாணவர் எழுதிய விடைத்தாள் தனக்கு பகிரப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பிறகு தன்னுடைய விடைத்தாள் கிடைத்தபோது, அதில் பல விடைகள் திருத்தப்படாமல் இருந்தது.Just to informGot my re-evaluation result. pic.twitter.com/gXguhDNDud— VEDANT (@VEDANTSHRIV17) June 28, 2026 பிளஸ் 2 மாணவர் வேதாந்த் ஸ்ரீவத்ஸவா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து விடைத்தாளை பகிர்ந்திருந்தார்.இந்த நிலையில், அண்மையில் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியான போது அவருக்கு கடும் அதிர்ச்சி. தன்னுடைய இயல்பியல் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருந்தும், ஒரு மதிப்பெண்கூட அதிகரிக்கவில்லை. தான் 12 விடைகளை மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்திருந்தும் ஒரு மதிப்பெண்ணும் கிடைக்கவில்லை.தற்போது மொத்த மதிப்பெண்களில் வெறும் 2 மதிப்பெண் மட்டுமே அதிகரித்துள்ளது. கணிதத்தில், கணினி அறிவியலில் தலா ஒரு மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன என தன்னுடைய அதிருப்தியை வேதாந்த் வெளிப்படுத்தியிருக்கிறார்.