எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது ஜனநாயக தவெக அரசு! கனிமொழி

Wait 5 sec.

ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூன் 29) போராட்டம் நடத்தப்பட்டது.இந்த நிலையில், சென்னை எழும்பூரில் திமுக மாணவரணி போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,"பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதுபோல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு. தங்களை தாங்களே ஜனநாயக சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக அரசு, எதிர்க்கட்சியினர் அறவழியில் போராட்டம் நடத்தவே அனுமதி மறுக்கிறது.கைது செய்யப்பட்ட திமுகவினரை உடனடியாக விடுதலை செய்வதோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க. மாணவர் அணி சார்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, கழகத்தினரை அராஜகமாக கைது செய்திருக்கிறது தவெக அரசு. தங்களை…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 29, 2026DMK MP Kanimozhi urges for a proper inquiry and action against Minister Sarathkumarகரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?