வருகிற ஜூலை 2-ம் வாரத்தில் முதல்வர் விஜய், கரூர் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரூர் நெரிசல் சம்பத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி, தேர்தல் பிரசாரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் சென்றபோது அவரது பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. sources says that Chief Minister Vijay is set to visit Karur in the second week of July