ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றின் முதல் போட்டில் கனடா வெற்றி பெற்றது.ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சுற்று முடிவடைந்து காலிறுதிக்கு முன்னர் நடைபெறும் நாக்-அவுட் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது.லாஸ் ஏஞ்சலீஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் கனடா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. நாக் - அவுட் சுற்றில் தென் ஆப்ரிக்கா அணி பங்கேற்பது இதுவே முதல்முறை. ஆட்டம் தொடங்கியது முதலே பந்தை தங்களின் வசம் வைத்திருந்த கனடா, கோல் அடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொண்டே இருந்தது. ஆனால், கோல் அடிக்கவில்லை. முதல் பாதியின் முடிவில் கனடா வீரர் மொய்ஸ் பொம்பிட்டோ தலையால் முட்டிய பந்தை தென் ஆப்ரிக்காவின் ஆப்ரி மோடிபா கோல் கோட்டிலிருந்து வெளியேற்றினார். இதனைத் தொடர்ந்து, டஜோன் புக்கானன் அடித்த பந்தை கோல்கீப்பர் ரான்வென் வில்லியம்ஸ் கோலாக மாறுவதை சிறப்பாகத் தடுத்தார்.இரண்டாம் பாதியில் தென் ஆப்ரிக்கா சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினாலும் கோல் அடிக்க முடியவில்லை. காயம் காரணமாக விலகியிருந்த கனடாவின் நட்சத்திர வீரர் அல்போன்சோ டேவிஸ் ஆட்டத்தின் 75 வது நிமிடத்தில் முதல்முறையாக இந்தத் தொடரில் களமிறங்கி ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்தார். சக வீரர் ப்ராமிஸ் டேவிட்டுக்கு கோ அடிக்கும் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.92 வது நிமிடத்தில் ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டபோது கனடாவின் மிடில் ஆட்டக்காரர் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ பெனால்டி பாக்சிற்கு வெளியே இருந்து அடித்த பந்து கீழ் மூலையில் சென்று அற்புதமான கோலானது. கடைசி நேரத்தில் ஸ்டீபன் யூஸ்டாக்கியோ அடித்த கோல் மூலம் கனடா அணி 1-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் கனடா பெற்ற முதல் நாக் - அவுட் சுற்று வெற்றி இதுவாகும். அடுத்ததாக, நெதர்லாந்து - மோராக்கோ போட்டியில் வெற்றிபெறும் அணியுடம் கனடா மோதவுள்ளது.Canada won the first match of the knockout stage of the FIFA World Cup football tournament.ஆர்ஜென்டீனாவின் இளம் மெஸ்ஸி..! யார் இந்த நீகோ பஸ்?