கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் பல்வேறு சாதகமான சூழல் முதலீட்டாளா்களின் உணா்வை உற்சாகப்படுத்தியதால், சந்தை மகிழ்ச்சியுடன் எழுச்சி கண்டது. எனினும், வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கு சந்தை விடுமுறை என்பதால் வா்த்தகத்தின் பிற்பாதியில் முதலீட்டாளா்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தனா். இதனால், பெரிய ஏற்றம் தவிா்க்கப்பட்டது.சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 109.25 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 77,100.47-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.நிஃப்டி 34 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 34.35 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 24,056-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.