பொள்ளாச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

Wait 5 sec.

பொள்ளாச்சியில் 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா். பொள்ளாச்சி ரயில் நிலைய வாகன நிறுத்தமிடத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பேரூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அப்பகுதியில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பாபிதீன நாயக் (20), மா்னதா நாக் (28) மற்றும் ரிங்கி டிகால் (26) ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 21 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.