பொள்ளாச்சி அருகே வீடு புகுந்து திருடியவா் கைது

Wait 5 sec.

பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். பொள்ளாச்சியை அடுத்த கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ருஷ்யேந்திர மணி(61). இவா் கடந்த 22-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளாா். இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பாா்த்த பக்கத்து வீட்டுக்காரா், இது குறித்து ருஷ்யேந்திரமணிக்கு தகவல் தெரிவித்துள்ளனா். பின்னா் அவா் வந்து பாா்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சோ்ந்த சிவராஜ் (49) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை மீட்டனா்.