7/16: உலகக் கோப்பையில் இருந்துகத்தார், செக் குடியரசு வெளியேற்றம்!

Wait 5 sec.

மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் 0 - 3 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றதால், கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து செக் குடியரசு அணி வெளியேறியிருக்கிறது.கால்பந்து உலகக் கோப்பை ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுவரும் இதில் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, 16 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுமென ஃபிஃபா விதிமுறைகள் தெரிவிக்கின்றன.இன்று சியாட்டல் திடலில் நடைபெற்ற போட்டியில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி கத்தாரை 3-1 என வீழ்த்தியது. இதனால், கத்தார் அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. அடுத்து, மெக்சிகோ தனது சொந்த மண்ணில் செக் குடியரசு அணியை 0-3 என வீழ்த்தியது. இந்தத் தோல்வியால் செக் குடியரசு உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. முன்னதாக, இந்த உலகக் கோப்பையில் இருந்து துருக்கி (குரூப் டி), ஹைதி (குரூப் சி), துனிசியா (குரூப் எஃப்), ஜோர்டான் (குரூப் ஜே), பனாமா (குரூப் எல்) ஆகிய ஐந்து அணிகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருந்தன. தற்போது, இதில் ஆறாவது, ஏழாவது அணிகளாக கத்தார் (குரூப் பி), செக் குடியரசு (குரூப் ஏ) அணிகள் இன்று இணைந்துள்ளன.7/16: Qatar and the Czech Republic eliminated from the World Cup!