தவெக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான என். ஆனந்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (ஜூன் 24) சந்தித்தார். அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், தவெகவில் விஜயபாஸ்கர் இணையவுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் என். ஆனந்தை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று சந்தித்தார். வரும் திங்கள் கிழமை தவெகவில் விஜயபாஸ்கர் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், ஆனந்த் உடன் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக சந்திப்பு நடைபெற்றது.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக, திமுகவுக்கு அடுத்து 3வது இடத்தை அதிமுக பிடித்ததால், அக்கட்சியில் பலர் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை உருவாக்கினர். தங்கள் ராஜிநாமா கடிதத்தையும் வழங்கினர். இதன் பிறகு நடந்த சமாதான பேச்சுக்கு பிறகு எஸ்.பி. வேலுமணி தலைமையில் சில உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகத் திரும்பினர். எனினும் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் இபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்து வந்தனர். இதனிடையே தனது எம்.எல்.ஏ. பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்தார். அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது.முதல்வரை சந்திப்பதற்கு விஜயபாஸ்கர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்பட்ட நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள என். ஆனந்த் இல்லத்திற்கு சென்று விஜய்பாஸ்கர் சந்தித்துள்ளர். இந்த சந்திப்பின் மூலம் தவெகவில் விஜயபாஸ்கர் இணையவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்Is Vijayabaskar joining TVK Meeting with Minister Anand