ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பங்குகள் 5 சதவீதம் சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: தங்கத்தை சுத்திகரிக்கும் மற்றும் நகை தயாரிக்கும் நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், தொடர்பான இடங்களில் அமலாக்கத் துறை இன்று சோதனை நடத்தியதில், அதன் பங்குகள் 5 சதவீதம் சரிந்து 'லோயர் சர்க்யூட்' நிலையை அடைந்தது.மும்பை பங்குச் சந்தையில் இந்த பங்கு 4.99 சதவீதம் சரிந்து ரூ. 102.85 என்ற 'லோயர் சர்க்யூட்' நிலையை அடைந்தது. அதே வேளையில், நிஃப்டி-யில் 5 சதவீதம் சரிந்து ரூ. 102.12 ஆக நிறைவடைந்தது.இருப்பினும், கடந்த ஏழு வர்த்தக அமர்வுகளில் இந்த பங்கு தொடர்ந்து ஏற்றம் கண்டு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.நிறுவனத்துடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் 'அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்' - (FEMA) கீழ் சோதனை நடத்திய மறுநாளே பங்குச் சந்தை இந்த விளக்கத்தைக் கோரியுள்ளது.செபி சுமத்தியுள்ள மிகப்பெரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் இந்நிறுவனத்திற்கு, இந்தச் சோதனை நடவடிக்கை மேலும் ஒரு சட்டச் சிக்கலாக அமைந்துள்ளது.நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான ராஜேஷ் மேத்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில், எந்தவொரு தவறும் நடக்கவில்லை என்று மறுத்திருந்தார்.Shares of gold refining and jewellery manufacturing company Rajesh Exports tumbled 5 per cent.வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!